நூல் என்றால் புத்தகம்
என் மனைவி நூல்கோல் கறி செய்தாள்,
என் மகளுக்கு உணவுடன் கொடுத்தாள்,
நூல்கோல் பிடிக்கவில்லை என்றாள்;
நூல்கோலில் நூல் உண்டு -எனவே
நூல்கோல் சேர்த்தால் படிப்பு வரும் என்றேன்
நூல் துணி நெய்யப் பயனாகும் பொருளன்றோ!
படிப்பு எப்படி வரும் என்றாள்?
நூல் என்றால் புத்தகம் என்றும் பொருளுண்டு,
நூல்கோல் சாப்பிட்டால் உடல் நலமுண்டு,
நூல்கள் பல கற்றால் அறிவுண்டு.