அவசியம் படிக்க முத்தான கவிதைகள் ...-பகுதி 6
தோழமைகளே,
இத் தளத்தில் வந்துள்ள கவிதைகளில் ,"அவசியம் படிக்க முத்தான கவிதைகள் "என 5 பகுதிகள் அளித்தேன். வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
மீண்டும் சில இப்போது உங்கள் பார்வைக்கு.அளிக்கிறேன். எல்லா கவிதைகளையும் வாசிக்க இயலாதெனினும் இதுப் போன்ற கவிதைகளை ஒரு படைப்பாளி கண்டிப்பாக வாசிக்கவேண்டும்.
பரிசுக்கே அப்பாற்பட்ட கவிதைகளை ... வாசிக்கும் எவரும் எழுதியவர்கள் எல்லா நலமும் வளமும் பெற மனமார வாழ்த்துங்கள்...அதுவே மாபெரும் பரிசு... !!!
எனது முயற்சி எவருடைய விமர்சனத்திற்கும் உரியதுதானே...?
கருத்துரைப்பது வளர்ச்சிக்கான வரம்...
தரம் பிரிப்பது ஊக்குவிப்புக்கான .உரம்.. அடையாளங் காட்டுவது மகிழ்ச்சி மலர்களின் சரம்...
பல பகுதிகள் இதுப்போல அளித்திட எனக்கு விமர்சனங்களே ஊக்குவிப்பானாக அமையும்...
வரும் விமர்சனங்கள் குறித்து எனக்கு கிஞ்சித்தும் வருத்தம் இல்லை..
...உளி பாறையை குத்துவது அதனுள் இருக்கும் சிற்பத்தை வெளிக்கொணரத்தானே.
.. கூர் கலப்பை நிலத்தை குத்துவது விளை பயிர் வளரத்தானே.
..தீக்குழம்பில் இரும்பு நனைவது கூர் ஆயுதம் உருவாகத்தானே.
..இப்படி எல்லாம் வலி பொறுத்தால் தானே வழி கிடைக்கும்...வாழ்வும் கிட்டும்...
பகுதி 6 க்கான படைப்புகள் இதோ...
ஜெரி பாஸ்டின்---விட்டில் பூச்சியாய்
ரோஷான்----யாதுமாகிய நீயே தாயே
ரமேஷாலம்----அகதி மரம்
மணவாசல் நாகா----பித்தான் துணியில் 10 ஆம் அறிவு
ரங்கராஜன் சுந்தரவடிவேலு--2 மொழிப்பெயர்ப்பு கவிதைகள்****
பொள்ளாச்சி அபி---12 .8 .2012 போகிற போக்கில்
**** பாப்லோ நெருடா மற்றும் மாயா ஏஞ்சலோ ஆகியோரின் அற்புத கவிதைகளின் மொழிபெயர்ப்பு......அருள் கூர்ந்து இளம் படைப்பாளிகள் அவசியம் வாசிக்கவும்...
மீண்டும் ச(சி)ந்திப்போம்
அன்புடன் அகன் ..