தூரம்

தோழன் கைகள்
தோளில் இருக்க
நெஞ்சமிரு துருவமனால்
தூரம்
காதல் சொல்லி
கையை பிடித்து
காமக்கணையில்
உயிரை பறித்தால்
தூரம்
பூவும் நாறும்
பிணைந்தே இருக்க
வாசம் மட்டும்
விலகி சென்றால்
தூரம்
செல்வச் செழிப்பு
சூழ்ந்திருக்க
நிம்மதி நெஞ்சை
நீங்கி இருப்பின்
தூரம்
கைகள் இரண்டு
சேர்ந்து நடக்க
பாதம் - இரண்டு
பாதை சென்றால்
தூரம்
பார்வை பார்த்து
பரிகசித்து -இதழ்கள்
மூடி இருகிக்கொnடால்
தூரம்
அன்பு பேசிபாராட்டி
பாவம் சொல்லி
பழி போட்டால்
தூரம்
உயிரும் மனமும்
ஒருங்கே இறுக்க
உயிர் நீங்கி
நெஞ்சம் வெடித்தல்
தூரம்
-வேதஹரி
தஞ்சாவூர்
9944185974