இன்று கொறிக்க..

இப்போது அறுபத்து ஆறு.
அடுத்த வருடம் அறுபத்தி ஏழு ...
ஆகி விடும்...சுதந்திரம்.
*********************************************
கடவுளின் முகவரி தெரியாமல்
கோபுரத்தில் திரிகிறது
குரங்கு.
**********************************************
கதவு திறக்கையில் முகம் மலர்கிறது
வண்ணத்துப் பூச்சியைத் தேடும்
வீட்டிற்குள் பூத்த பூ.
*************************************************
கவிதை எழுதும் பேனாவை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
கவிதை தொலைந்து விடாமலிருக்க.
***************************************************
கோலங்கள்
சிலசமயம்
காதலையும் வரைகின்றன.
****************************************************

எழுதியவர் : rameshalam (15-Aug-12, 7:03 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 160

மேலே