சிக'ரெட்
என் உதடுகளை...
சிவப்பாக்கியவனே-நீ தான்...
இருந்தாலும்...
இவ்வளவு நாகரிகம் கூடாதடா
உனக்கு...
என் உதட்டில் படியும் கறையையும்...
நாகரிகமாய் தட்டி விடுகிறாய்....
என் உடலை...
கட்டித் தழுவி முத்தமிடும்- நீ...
உன் மீதுள்ள ஆசையால்...
என் உதடுகள்
உன் உதடுகளை நெருங்க
தூக்கி எறிகிறாயே...
நியாயமா இது???
இவள்,
****** சிக'ரெட் '******
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.