முரண் துளிகள் !

மஞ்சள் கோட்டில்
நாய் அடிபட்டு செத்தது
மனிதனுக்கு ஆறறிவு ! (பெருந்தெருவில்)

மலர்ச்சாலை முதலாளி
மனமுருக வழிபடுகிறார்
என்ன வேண்டுதலாயிருக்கும் ? (கடையில்)

தூங்குவதற்கு கட்டிலே தேவையில்லை
நாற்காலி போதும்...
அரசியல் ! (நாடு தூங்குவதற்கு)

விழுந்த இடத்தில்
சமாதானம் சொல்லி கொடுத்தது
வெடிகுண்டு !

“யாமிருக்க பயமேன்”
கோயில் கதவில்
பெரிய பூட்டு !

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையும்
கூன் !

கோழையின்
வீரம்
தற்கொலை !

அய்யர் வீட்டில்
முட்டை பொரிக்கும் வாசம்
சைவ முட்டையோ ?

ஆண்கள் செய்யும்
பகிரங்க விபச்சாரம்
சீதனம் !
__________
(சீதனம்,தற்கொலை இரண்டும் ஏற்கனவே நான் பதிவு செய்தவை,)

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-Aug-12, 8:45 am)
பார்வை : 257

மேலே