வாழ்க்கை கவிதை... (தன்னம்பிக்கை)
முள்ளின் திறமையை பார்
தன்னைக் காலால்
மிதித்தவனை
கையால் எடுக்க
வைக்கிறது!
கவிதை - 2
உன் வாழ்க்கையில்
வெற்றி குறைவு என
என்றும் வருந்தாதே ....
ஏனென்றால்...
செடியில் இலைகள்
அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும்
ஒரு சில மலருக்கே
மதிப்பு அதிகம்.
கவிதை - 3
நாம்...
கொண்டு செல்ல
எதுவும் இல்லை
உலகில்...
நாம்...
கொடுத்து செல்ல
எல்லாம் உள்ளது
உடலில்.
நமக்காக...
காலம் காத்திருப்பதில்லை
ஆனால் நம்மை
நேசிக்கும் உண்மையான
இதயம் நமக்காக
நிச்சயம் காத்திருக்கும்!
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.