என்னை பற்றி என்னை போன்றோரை பற்றி!!!!
நம்முடைய இவ்வுலகில்
நாம் மற்றோருக்காக வாழ்கிறோம்,
மற்றோருக்காக உழைக்கிறோம்,
மற்றோருக்காக உடுத்துகிறோம், ஏன்! மற்றோருக்காக சாப்பிடும் முறையையும் மாற்றுகிறோம்!.
பருவம் வராமலே காதலிக்க துடிக்கிறோம்,
காமத்தை காதலென்று வர்ணிக்கிறோம், பொருள்புரிந்து படிக்க மறுக்கிறோம்,
நாம் நம்மையே இழக்கிறோம், எதையும் சிந்திக்க மறுக்கிறோம்,
கண்ணை திறந்துகொண்டு கனவுகள் காண்கிறோம்!! இனியாவது நாம், நமக்காக, நம் அடையாளத்துடன் வாழவழிசெய்வோம்!!!
ஆதங்கத்தில் ஓரிரு வரிகள்....
"உருவமின்றிட்ட மனத்தினூடே உலகினும்
போதா ஆசைகள்
மலர்தேடும் மகரந்தங்களாய் மோகத்தால் துணைதேடும் தூண்கள்
அன்பெது, பண்பெது அறியாப்பதர்கள் மனம்செய்திட்ட
அற்றோரின் அறிவு!
அறிவியல், ஆன்மீகம் எனும்பெயரால் கோழையாகிட்ட மனமும்,
ஊனமாகிட்ட மூளையும்
உயிரணு உரையுமுன் உணர்ந்திட்டிட்டு!
உன்னை, உயிரை, உள்ளத்தினை!!
விதையாய் வீற்றிடு விருட்சமாய் வென்றிடு
உன்பிறப்பை!!! "