அப்பாவி காதலன்

இமைகளை முத்தமிட்டேன்
இமை மூடினாய்
இதழை நெருங்கினேன்
இதழ் மூடினாய்
சங்கு கழுத்தை
நாவால் வருடினேன்
நடுங்கின அவைகள்
இதயத்தில் இதழ் பதிக்க
எங்கே என
தேடினேன்
எங்கும் காணவில்லை
அதன் இருப்பிடம்
என் இதயத்து எப்போதோ மாறியதை
அறியாத அப்பாவி நான்

எழுதியவர் : (18-Aug-12, 7:30 am)
சேர்த்தது : m arun
Tanglish : appavi kaadhalan
பார்வை : 140

மேலே