காற்று - ஆசை

கண்முன் வந்துபோகும் பூங்காற்றே - உன்னை
கட்டி அணைத்திட ஆசை...
நான் உயிர்வாழ நீ வந்தாய் - உனக்கு
நன்றி சொல்லிட ஆசை...
விதவிதமான பூக்களுடன் விளையாடுகிறாய் - உன்னுடன்
விளையாடி மகிழ ஆசை...
மழைமேகம் கொண்டுவருவாய் - உன்னுடன்
மனம்களிக்க ஆசை...
உலகில் நீ இல்லா இடமில்லை - உன்போல்
உருமாரிட ஆசை...