என் தமிழ் மொழி
காகித பூக்கள்
வாசத்தை இழந்தாலும்
வாடிப் போவதில்லை......
மலை அருவி
சலசலப்பு குறைந்தாலும்
சலித்துப் போவதில்லை.....
மாலைச் சூரியன்
மறைந்து போனாலும்
மட்கிப் போவதில்லை.....
தமிழ் மொழி
ஆதிக்கம் குறைந்தாலும்
அழிந்து போவதில்லை....