கல்லூரி நண்பர்கள்...
எத்தனை நாட்கள் ஒன்றாய்
இருந்தோம் அடிமரமாக.....
அழகாய் வளர்ந்தது அடிமரம்
சந்தோசத்தில் உறவாடி மகிழ்ந்தோம்
துக்கத்திலும் கூடி நின்றோம்...
இது அடிமரம் கிளை விடும் சமயம்
பிரிந்து தானே ஆக வேண்டும்.
பெருமிதமாய் பிரிந்தோம் பல திசைகளில் வெட்டப்படும் கிளைகளாக அல்ல
வேரூன்றும் விழுதுகளாய்...
அன்று பிரிந்தது நிரந்தரமல்ல
தூரத்து தொடுவானமாய் தொட்டுக்
கொண்டு தான் இருப்போம்....
என்றும் நட்புடன்