கரைந்தோடும் காலம்
கடந்த காலமெல்லாம் கனவாயிற்றே,
நடந்த பாதையெல்லாம் நினைவாயிற்றே....
நகரும் முகிலோ நாட்களெல்லாம்,
நுகரும் காற்றைப் போல விரைந்தோடுதே....
கண் மூடி திறப்பதற்குள்,
கணம் நூறு சென்றுவிட்டது....
இமை சிமிட்டல் தன கொண்டேனா,
இல்லை, இரவு தூக்கம் கண்டேனா....
உடைந்த உணர்வுகள் கொண்டவன் ஆகிவிட்டேன்,
முடிந்த நாட்கள் இனி இங்க வருமா....
கடந்த கால நினைவுகளைக் கொண்டு,
விடிந்த பொழுதில் நானிங்கு வாழ்கிறேன்....
நட்பென்ற காகிதம் நனையக் கண்டேன்,
அதன் எழுத்துக்கள் ஒவ்வொன்றாய் அழியக் கண்டேன்....
காதல் நிலா வானில் கண்டேன்,
அது தேய்பிறை கொண்டு மறையக் கண்டேன்....
வாழ்கை விரைவாய் நகரக் கண்டேன்,
அம்மாற்றம் வெறுத்து, வாழ்க்கையை நரகம் என்றேன்....!!!!