நான் சொல்லிய காதல்

காதலில் விழுந்த அந்த ஒரு கணம்
கண் சிமிட்டும் நேரத்தில் உன்னிடம் பறிகொடுத்த என் மனம்
உன் கரம் தொட்ட பொது நேர்ந்த சுகம்
வாழ்நாள் வரை இதுவே என் நெஞ்சிற்கு இதம்

முதன்முதலில் நம்மை ஒன்று சேர்த்த அந்த இறைவனின் சேவை
உள்ளம் தேடியது உன் உறவை
நெஞ்சம் சுமந்த காதலை அன்று கூறியது என் பார்வை
என்றும் நீதான் என் உயிர் என்றால் இந்த பாவை

நீ கூறிய சம்மதம்
நெகிழ்ந்து போய் துள்ளியது என் உள்ளம்

இன்று விதி நம்மை பிரித்திருக்கலாம்
ஆனால்
உன் நினைவுகள் என்னைவிட்டு நீங்கியிருந்தால்
அன்றுதான் நிச்சயம் என் மரணம்
என் உயிரும் உனக்கேதான் அர்ப்பணம்

எழுதியவர் : Shravanyaa (20-Aug-12, 4:11 pm)
சேர்த்தது :
பார்வை : 247

மேலே