அன்பான மகள்
பொத்திப் பொத்தி வளர்த்தார்
பொன்மகளாய் தன்மகளை !
பாசத்தைக் கொட்டி தீர்த்தார்
பாரில் உள்ளோர் வியந்திட !
தாலாட்டு பாடி வளர்த்தார்
தாயில்லா மகள் என்று !
அன்பினை அள்ளிக் கொட்டினார்
அளவிலாமல் ஆசை மகளிடம் !
விருப்பமாய் ஏதேனும் சொன்னால்
விரைவில் செய்து முடித்திடுவார் !
குறையிலா வளர்த்திட்ட குணவதிக்கு
குணாளனைத் தேடினார் மணமுடிக்க !
உறங்கிடும் மகளின் அருகில்
உருகிடும் மடல் வைத்தார் !
தேர்வு செய்திடுக நீயேஎன்று
புகைப்படங்கள் நான்கினை இணைத்து !
அதிகாலை விழித்திட்ட அப்பா
அதிர்ந்தார் மகளின் மடலைப் பார்த்து !
பிரியா விடைப் பெற்றிருந்தாள்
பிரியமான காதலனுடன் இணைவதாக !