மன்னிக்க ஒன்றுமில்லை
என்னையே பார்த்தேன் நான்,
இழந்ததும் வாழ்வில் அடைந்ததும் ,
இங்கு கிட்டியதும் கைக்கு,
எட்டாமல் விட்டதுவும்,
பெருமை சொல்ல இடமில்லை;
வீனாய் போன நாட்கள் இங்கே!
வில்லின் அம்பு குறி தவறி,
எய்தவன் இடமே வந்ததுபோல்,
நான் வாழ்ந்ததுவும்,வீழ்ந்ததுவும்,
விளக்கம் என்ன சொல்வேன்,
தோல்வியே வெற்றிக்குத்,
தோள் கொடுக்கும்,
பதுங்கிய அலைகளே
பாய்ந்துவரும் சுனாமியாகும்;
இங்கு பெருமையும் சிறுமையும்,
பெரிதில்லை, இரவின் பின்,
பொழுது விடிந்திடும்,
காலங்கள் மாறி வரும்,
கடந்து செல்லும் இளமையும்,
கருத்தறிந்து முதுமை கொண்டேன்.
மாறுவதே உலகம் என்றால்,
மன்னிக்க ஒன்றுமில்லை