கடைசி சில நிமிடம் ...!

அம்மா ...
உயிர் கொடுத்தவள்
இன்று
உயிருக்காக ...போராடுகிறாள்
மரணத்தின் பிடியிலிருந்து !

என்னை சீராட்டி ,,பாராட்டி
வளர்த்தவள் ..இதோ ..
என் கண்முன்னே
போகப் போகிறாள் ...!

என் கரங்களை
பற்றிக் கொண்டு
உற்று உற்று பார்க்கிறாள் ,
சுற்றி நிற்கும் பிள்ளைகளின்
தலை வருடுகிறாள் .,
விழியோரத்தில்
கண்ணீர் வழிந்தோடுகிறது ...
அழுகிறார்கள் ..
அழுகிறேன் ...!

வாழ்க்கை
அவ்வளவுதான்
என் நினைத்தேன் ..
அப்பா இறந்த போது ...!
அழுதேன் ...அழுதார்கள் ..
ஆறேழு நாட்கள்
அமைதியாகவே ...!

சின்னப் பெண்
தொலைக்காட்சியை திருகினாள்
செய்தி ..சீரியல் ..சினிமா ..
மாறிவிட்டது ..
அதோ ...
அப்பா ..சுவற்றில் ..மாலையோடு !

அப்பாவின் பிரிவு
பாதிக்க வில்லை ...!
அம்மா இருக்கும்
தைரியத்தில் ...!

அம்மா ..
இது வேறாக இருந்தது ...!
எனக்காக வாழ்ந்தவளே ..
எனை விட்டு போகிறாயே ...
ஏக்கம் தொண்டையை
அடைத்துக் கொண்டது ..!
மனம்
அம்மா...அம்மா...என
ஓலமிட்டது ...!

பார்வையை
சுழல விடுகிறாள் ....
மனைவி ..பிள்ளைகள் ..
என் முறை வந்தபோது
கரங்களை இறுக்கி பிடித்தாள் ..
"போகிறேனடா "எனச்
சொல்லாமல்
சென்று விட்டாள் ...!

எல்லாம் இருந்தும்
ஏதும்
இல்லாதவனாகி விட்டேன் !

அழுதால்
மறந்து விடுவதில்லை ..
அம்மாவின் அன்பு ...!

எழுதியவர் : மு.பாலு (22-Aug-12, 9:32 pm)
பார்வை : 400

மேலே