வாழ்ந்திடுவாய் மற்றோர் வாழ்த்திடவே.
மாற்றம் என்பது வீசும் காற்றைப் போல்,
ஒட்டிவரும் உன்னைத் தொட்டுப் போகும்,
நீ கண்ணாடி முன் நின்று கவனித்தால்,
உண்மை கண்ணுக்கு தெரியவரும்,
உன்னாலே முடியாததில்லை,
கட்டவிழ்த்து விட்டது போல்,
களம் இறங்கு, வெற்றி உன்னைத்
தட்டிவரும்,கதவுகளை திறந்து வை,
பெட்டிப் பாம்பாய் பதுங்கி நின்றால்,
உன் பெருமையினை யார் அறிவார்?
பறைசாட்டு, இந்த உலகத்தார்,
அறியட்டும் உன் புகழை,
விட்டு விடாதே, வாழ்க்கை ஒன்றுதான்,
வாழ்ந்திடுவாய் மற்றோர் வாழ்த்திடவே.