கண்ணுக்கு எட்டிய தூரம்வரை.......
கதவு, ஜன்னல், மேஜை, நாற்காலி
எல்லாவற்றிற்கும் மரம் தேடினேன்.
எளிதில் கிடைத்துவிட்டது.
களைப்பாய் இருப்பதால்
இளைப்பாற தேடினேன்
மரத்தின் நிழலை
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
காணவில்லை ஒரு மரத்தினையும்
மனிதர்கள் வளரவிடாதது
மரங்களை மட்டுமல்ல,
அவர்களின் மனங்களையும்தான்....