நேர்மறை கவிதை

விழிகளில் பார்வை புதிதாக
விளங்கிடும் உலகம் அதுவாக

நெஞ்சினில் எழுகின்ற எண்ணங்கள்
நேரானதாக உருவாக

நேரான எண்ணம் சீராக செல்ல
மேலாகும் வாழ்க்கை தானாக

மகிழ்ச்சி எந்தன் மேலாடை
தினம் ஒரு சந்தோசம் உடுத்திடுவேன்

அமைதியே ஆருயிர் நீயே
ஆழ்மன ஆசையும் நீயே

நீளாயுள் நிரந்தர தோழா
ஆரோக்கியம் என்னும் பரிசு தாடா

உள்ளம் மாற நல்லது போல
ஒளிரும் முகம் அது போல

மனதுக்குள்ளே மாற்றம் வந்தால்
மனித வாழ்க்கை மாற்றம் கொள்ளும்

எழுதியவர் : manimagan (23-Aug-12, 9:19 pm)
பார்வை : 317

மேலே