காதல் குறும்பாக்கள்

காதல் குறும்பாக்கள்
================================ருத்ரா

அம்புகள்

எங்கிருந்து எய்கிறாய்.
இரவெல்லாம் உன்
அம்புப்ப‌டுக்கை தான்.


பிக்காஸொ

நீ எங்கிருக்கிறாய்?
கோடும் வ‌ட்டமுமாய்
இவ‌னிட‌ம் தேடுகிறேன்.


செம‌ஸ்ட‌ர்

இந்த‌ அர்ரிய‌ர்ஸ் க‌வலை இல்லை.
என் ப‌த்து கடிதத்துக்கு பதில் இல்லை.
இந்த‌ அர்ரிய‌ர்ஸ் தான் அரித்து தின்னுகிற‌து.


=======================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (24-Aug-12, 12:52 pm)
பார்வை : 536

மேலே