வேண்டாம்

வேண்டாம்

பெண்மையின் கண்களில்

காதல் வடிவது வேண்டாம் .......!

உண்மையின் இரவில்

பொய் விடிவது வேண்டாம் ................!



காட்டாற்றில் கப்பல்

விடும் கல்வி வேண்டாம் ..........!

ஊற்றாழியில் துப்பல்

போடும் பிறவி வேண்டாம் ...............!




பணமூட்டையில் பிணமாகும்

அரசியல் பிரதி வேண்டாம் .......!

வனவேட்டையில் ரணமாகும்

அறமுயல் குருதி வேண்டாம் .........!




பசியெய் ருசி கண்ட

பட்டினி வேண்டாம் ,,,,,,,,,,,,,,,,!

வசியத்தை ஊட்டி

வசித்துக்கொண்ட

பொய்த் துறவி வேண்டாம் .............!


வேண்டாம்


தமிழ் மறக்கும் தமிழன் வேண்டாம்

எழுதியவர் : தினேஷ்பாபு (26-Aug-12, 11:14 am)
Tanglish : ventaam
பார்வை : 352

மேலே