சிறகுகள்

சிறகடிக்க துடிக்கும் இந்தச்
சிறகுகளைக் கட்டிப்போட்டவர் யார் ?
சிறகுகள் சிகரத்தை தொடட்டும்
சிந்தனையுடன் சிறகடிக்கட்டும்.

தென்றல் உங்களிடம்தான்
மென்மையை கற்றதோ --இல்லை
மெல்ல மெல்ல நீவுவதைக் கற்றதோ !

பெண்ணை விட நீயே
மென்மை என்றென்றும் .

பறவைகளின் அழகிய வடிவத்தின்
மென்மையான கவசங்களோ !

எத்தனை ஆடைகளை
மனிதன் நெய்தாலும்
உங்களுக்கு இணை யாகுமோ !
சுதந்திரத்தின் வாசம்தனை
சுவாசித்து சுவாசித்து
சுகவாசியாக உறங்கும்
சுதந்திர வாசிகளா!

காற்றின் அனைத்து நிலைகளையும்
அனுபவித்த சிறகுகளே
இன்று அனுபவமுற்ற
மூத்த குழந்தைகளாய் --வடிவில்
முதிர்ந்த மென்மையான பஞ்சுகளாய்

எழுத துடித்த அக்கால மனிதனுக்கு
உன்னையே அர்பணித்தாய்
உதிரங்களை தொட்டு தொட்டு பழகிய
உனக்கு வண்ண மைகள் எப்படியோ ?

உதிரங்கள் உணர்வுகள் கலந்திருக்கும்
மைகள் அவ்வுணர்வுகளை எழ வைக்கும் .

பல காயங்களுக்கு மருந்தே
உன் மேவல்தான் .
அழகாக வகிடெடுத்து
சீவியவரெவரோ!
கலையாமலிருக்க
தடவிய எண்ணெய்தான் என்னவோ !

இரக்கமுள்ள இம்மண்ணில்
இறந்துவிழும் உனக்கு மீண்டும்
இன்னுயிர் கொடுப்போம் நாங்கள் .

உயிருள்ள உடலிலும் உயிருள்ளதாய்
உயிரற்ற உலகிலும் உயிருள்ளதாய்
உயிரற்ற உயிர்மையே ...
உருகுகிறோம் உனைகண்டு .

எழுதியவர் : சுகந்த் (27-Aug-12, 3:48 pm)
பார்வை : 312

சிறந்த கவிதைகள்

மேலே