நானும் தாய்
கனவுகளோடு காத்திருந்தேன்
என் தாய்க்கு கிடைத்த வரம்
நானும் பெற்றிட
மாதம் நிற்கவில்லை
வருடங்களும் கழிந்தன
கண் நிறைந்த கணவன்
பாசமிகு குடும்பம் - இருந்தும்
மனதின் தேடல் கிடைக்கவில்லை
எண்ணற்ற சொந்தங்கள்
என்னை சுற்றி இருந்தும் - மனம்
எதிலும் இலயிக்கவில்லை
அம்மா என்ற என் பிள்ளையின்
மழலை மொழிக்கு இடாகுமா - பிறர்
என்னை அழைக்கும் உறவு முறைகள்
தினமும் போய் வருகிறேன்
எண்ணற்ற திருத்தலங்களுக்கு
கண் திறந்தது இறைவன் மட்டும் அல்ல
இன்று நானும் தான் - அம்மா
என்று சிக்னலில் நின்று
அறைஜான் கூட இல்லாத
தன் வயிறு காட்டி
பசிக்காக அழும்
குழந்தைக்கு தாயானேன்
யார் பெற்ற பிள்ளையோ
எனக்கு பட்டம் தந்தது தாய் என்று