இன்று நான் நாளை நீ

காலை சுற்றி வந்தாய்
கன பொழுதும்
என் நினைவை மட்டும் அல்ல
என்னை விட்டும் பிரியாது நின்றாயே
நீ சிறு பிள்ளை என்பதாலா

வளர வளர உன் தோழியாக
நீ வளர்ந்த பின் உன் பிள்ளையாக
மாறிய என்னை ஓதிக்கிவிட்டாயே
மனிதநேயம் இன்றி முதியோர் இல்லத்தில்

உன்னை ஈன்ற நெஞ்சம்
வேண்டுகிறது இறைவனை
நாளை என் பிள்ளைக்கு வேண்டாம்
இந்த நிலை என்று

எழுதியவர் : Meenakshikannan (27-Aug-12, 5:37 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 271

மேலே