தலை குனியாதே

வாய்நிறைய அம்மாவென
அழைத்த குழந்தைக்கு
மம்மியென யார்
அழ சொன்னார்
அ ஆ என அகரம் கற்ற மழலையை
எ பி என எழுத வைத்தது யார்
தமிழ் கற்றால் உனக்கு தரக்குறைவு
என தாரகம் புகட்டியது யார்

ஆயிரம் மொழி பேசு ஆனால்
அன்னை தமிழை நேசி
அதைவிடுத்து
பெற்றதாயை வேசியாய்
பார்க்க துடிக்கும் பரத்தையாய்
தாய்மொழியை எண்ணாதே
அதனால்
தலைகுனிந்து நில்லாதே

எழுதியவர் : (27-Aug-12, 7:02 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 357

மேலே