மாற்றம்

மாற்றம் ஒன்று தான் மாறாதது
மாறிக் கொண்டே இருக்கிறது உலகம்
அன்று போல் வாழ்கை இன்று இல்லை
இன்று போல் வாழ்கை நாளை இல்லை
இன்றைய மாற்றம் நாளையின் தொடக்கம்
மாற்றி கொண்டாய் உன் தோற்றத்தில்
உடைகள் மாறின
நடைகள் மாறின
கலாச்சாரம் மாறியது
பருவம் மாறியது
மாறிக் கொண்டே இருக்கிறது உலகம்
மாற்றம் உலகில் மட்டும் அல்ல
உன்னிலும் என்னிலும் மாற்றம்
தொடர்த்து நடக்கிறது
காலத்தின் வலிகளை மறக்க
மாற்றம் இன்றியமையாதது

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணபெருமாள் (29-Aug-12, 6:33 am)
Tanglish : maatram
பார்வை : 153

மேலே