கைகளில் கட்டப்பட்ட இதயத்தின் துடிப்பு...

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒவ்வொரு மணித்துளிகளையும்.....
திட்டம் போட்டு வீணடிக்கும்....
மனிதர்களே........
உங்கள் கைகளில் நான்...
கட்டப்பட்டுக் கிடப்பதால்...
என் இதயத் துடிப்புக்கூட....
லப் டப் என்று அடிக்கமுடியாமல்...
டிக் டிக் என்று....
சினுங்குகிறதே.....
என் சிணுங்கள் சத்தம் கேட்டாவது...
நீ உன் பொன்னான நேரத்தை...
மண்ணாக்க நினைக்காமல்
இருப்பாயோ என்ற
ஏக்கத்தில் தான்....
ஒவ்வொரு மணித்துளியிலும்....
சிணுங்கிக் கொண்டே துடிக்கிறேன்....
நான்.....
உங்கள் கைகளில்....!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,