மனவலி ...

மனசுதான் வலிக்குது -கொஞ்சம்
மருந்தையும் தேடுது
மனசையும் கொன்னுபுட்டு
மனுசன்னு சொல்லிக்கிறான் ...
மருந்தென்ன இருக்குது
மனம்விட்டு பேசத்தான் -மனுசன்
மண்ணுக்குள்ள போனாலும்
மனச விட்டு போவதில்ல
நித்தம் நித்தம் தவிக்கிறான்
நிழலையும் காணாமல்
பட்டினியாய் பாதத்திலே
பாசப்பஞ்சத்தில மனுசன் இல
போனமனசோ பொக்கிசமா -இங்கு
உள்ள மனசுதான் ஊனத்தில
தூக்கமும் எதுமில்ல
துயரத்துக்கோ பஞ்சமில்ல
சிந்தனையும் தானுமில்ல
சிந்திக்கவும் வழியுமில்ல
மந்தமாய் நானும் இங்கே
மதியும் கெட்டு சென்றேனே
மருந்தென்ன இருக்குது
மன வலிய போக்கத்தான்
மனசுதான் வலிக்குது -கொஞ்சம்
மருந்தையும் தேடுது ....