ஆசை.....

குடிசையும், வறுமையும்
இல்லாத தேசம் காண ஆசை....
ஊழல் இல்லா ஆட்சி
ஒருமுறையேனும் காண ஆசை .....
கையூட்டு பெறாத அதிகாரிகளை
கனவிலேனும் காண ஆசை .......
ஒலிம்பிக்கில் இந்தியா
முதலிடம் பெற ஆசை......
மழைநீர் சேமித்து, நிலத்தடி நீர்
பெருக்க ஆசை ........
எடை குறைவில்லா ரேசன் பொருள்
வீடு தேடி வர ஆசை........
இலவசம் பல தரும் அரசு, தினமும்
பெட்ரோல் தர ஆசை .......
ஈழத்தில், தமிழனின் சுதந்திர
ஆட்சி காண ஆசை.........
இத்தனை ஆசை இருந்தும்
இன்னும் ஒரு ஆசை.......
முல்லை பெரியாறு அணையில்
நூற்றி ஐம்பத்து ரெண்டு அடி
தண்ணீர் தேக்கி
தென் தமிழக விவசாயம் செழிப்புடன்
இருப்பதை காண ஆசை.......