இது எப்போ முடியும்
சலித்துக்கொள்ளதே
சலித்துக்--கொல்லாதே
நாளைய ஓட்டுக்கு
இன்றும் நிறைவேறும்
கண்துடைப்பு தீர்மானங்கள்
கனவும் கசக்கும்
வாடும் பயிருக்கு
காரணம் ஆணையமா
காவிரியும் கரைகிறது
அணைகள் கண்துடைத்துவிட
ஈழத்தமிழ் உரிமைக்கு
கட்சிகளும் போராட்டத்தில்
புலிகளின் வீரமரணம்
நரிகளிங்கு ஓட்டுவேட்டையில்
கூட்டணிகள் வேறுவேறு
நாடென்னவோ ஒன்றுதான்
மாறும் ஆட்சிகள்
மக்கள்நலன் வேறாகுமோ
இலவசங்கள் சுவைக்கும்
மக்கள் மனதில்
முன்னோக்கு காட்சிகள்
கைதட்ட மட்டும்
நடக்கும் தவறுகள்
ஆளும் கட்சிக்கே
இதுமுன் நடந்தவை
சீரணமாக்கிய எதிர்கட்சிகள்
குற்றம் கண்டுபிடிப்பதில்
ஆண்டுகள் கழி(ளி)த்து
அரசியல் படிப்பில்
உருவாகும் மேதைகள்
ஓட்டுவாங்க வீதிகள்ஓடும்
கால்கள் கட்டிக்கிடக்கும்
சட்டசபை நாற்காலியில்
ஊமையாய் உறங்கிக்கொண்டே
மக்கள் வளர்த்துவிட்ட
அரசியல் வித்து
வேரூன்றி ஆழமாய்
மாறுதல் ஐந்தாண்டுகளுக்கொருமுறை
சலித்துக்கொள்ளதே சலித்துக்--கொல்லாதே
மக்களுக்காக மக்களாட்சி
மக்களமைக்கும் காலம்
தூரத்தில் நம்பிக்கையே.......
-இப்படிக்கு முதல்பக்கம்