ஏங்குகிறேன்
ஏங்குகிறேன்
ஒரே ஒரு நாள்
ஆண்களை போல்
வாழ்ந்திட .....
டீ கடை
இருக்கையில் அமர்ந்து
டீ அருந்தவும்
சுவற்றில் அமர்ந்து
வெட்டி கதைகளை
பேசவும்....
இருசக்கர வாகனத்தில்
நெடுதூர பயணம்
செல்லவும்
தோழியின் தமக்கை
திருமணத்தில்
இரவு கண் விழித்து
வேலை செய்யவும் ...
நடு இரவில்
சாலைகளில்
கதை பேசி
நடக்கவும்...
தோழியின்
மரணத்தில்
முதலாகவும்
இடுகாட்டில்
இருந்து கடைசியாகவும்
திரும்பி வரவும் .....
வரம் தரவில்லை
என்னை போன்ற
பெண்களுக்கு