கசாப் தூக்கு
மனித உயிர்களை
கசாப்பு கடை
கோழிகளை போல்
கொடுரமாக
கொன்று குவித்த
கசாப்புக்கு தூக்கு
இதை நீக்கு என்று
சில குரல் கேட்டபோதும்
நீதி தேவதையின்
தராசு சரியவில்லை
சரியாக உயர்ந்திருகின்றது
மரண குற்றத்தினை
எதிர்க்கும்
மனிதர்கள் கூட இது
மன்னிக்க முடியாதது
என புரிந்து
மவுனியாகி விட்டனர்
மன்னிப்பு என்பது
மனிதர்களுக்கு மட்டும்தான்
கொலைவெறி கொண்ட
மிருகங்களுக்கு அல்ல
மானுடம் தெரிந்துகொள்ளட்டும்