நல்ல நட்பு = மதி + ஹரி = மதிஹரி


ன்பைத் தருவதிலே என் அன்னையை மிஞ்சினாள்

னந்தமாய் நான் வாழ இறைவனை கெஞ்சினாள்

ன்னலென நான் சொன்னால் ஏனென்று அஞ்சினாள்

ர்க்கின்ற கவிதைகளால் தமிழதனை கொஞ்சினாள்

யிர்த்தோழி நட்பதிலே சிகரத்தை விஞ்சினாள்

க்கம் நான் தொலைத்திடின் நம்பிக்கை ஊட்டினாள்

ன் நல்லாசிரியை போல் தலையிலே குட்டினாள்

ன் தோழி எனக் கேட்க தவறை சுட்டிக் காட்டினாள்

ம்புலனை வென்றுயர அறிவுரைகள் கூறினாள்

ன்றுபோல் நினைத்திருக்க என் நினைவாய் மாறினாள்.....!
ஓஹோ...! என நான் மகிழ எதிர்காலம் ஆக்கினாள்
ஓள....கிரேட்...! என நான் வியக்க
உயிர்த் தோழியாக வாழ்கிறாள்........!

அது சரி.....! யார் அவள்...?!!!!
அவரை நான்.........

அ-றிவுப் பெட்டகம் என்பேன்
ஆ-ன்மாவின் நட்பு என்பேன்
இ-னிய தோழி என்பேன்
ஈ-டில்லா ஒருத்தி என்பேன்
உ-ள்ளதை சொல்பவர் என்பேன்
ஊ-னில்லா உளம் கொண்டவர் என்பேன்
எ-ன்.வளர்மதி என்பேன் ( இனிசியல் என் )
ஏ-ன் என்பார் நான் தவறிழைத்தால்...
ஐ-யம் வரும் அவர் கேள்விகளால்
ஒ-ழுங்காக என் கவிதை வரும்
ஓ-ம் என்பதாய் அவர் கருத்திருக்கும்...!
ஔ-டதமே அவர் நட்பு பகை நோய்க்கு..!
அக்-தே அவரது இயல்பம்மா....
அவர் எழுத்து டாட் காமின் சொத்தம்மா..!

( அறிவுப் பெட்டகம் என்ற வரியில் இருந்து
5 .11 .2011 அன்று என் வளர்மதி என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை இது - இதற்கு வந்த சில கருத்துக்களை கீழே காண்போமா ? )
============================================
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா07-November-11 3:33 PM
=============================================
உயிரெழுத்தில் உயிர்கலந்து எழுதிய இந்த கவிதைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் , தோழி மதிக்கு இதைவிட சிறந்த பரிசு ஏதும் இல்லை எனலாம் , உங்கள் நட்பு நாளும் நிலைத்திருக்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்..

நட்புடன்

தனிக்காட்டுராஜா...

HARI HARA NARAYANAN.V 07-November-11 6:02 PM

மதியை பயன் படுத்தி எழுதிய கவிதை..அதில் அறிவோடு சேர்ந்த உயிரோட்டம் இருப்பதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் அனைவரின் நட்பு கிடைத்தது எனது பெரும் பாக்கியம் நண்பரே..! வாழ்த்துக்கு நன்றி ! அன்புடன் ஹரி
===========================================

Dr.V.K.Kanniappan05-November-11 9:14 PM

ஹரி, அருமையான கவிதை. வளர்மதி தகுதியான பெண்மணி. வாழ்த்துக்கள்.

HARI HARA NARAYANAN.V 05-November-11 10:12 PM

டாக்டர் அவர்களே எனக்கு டாக்டர் பட்டம் பெற்றதுபோல் உங்கள் பாராட்டு. எனது தோழி மதி...சிவனையே எதிர்த்த நக்கீரர் போல... தப்புன்னா தப்புதான்... இதுதான் மதியின் ஸ்பெசல் கேரக்ட்டர்...அதுதான் இந்த கவிதையை என்னை எழுத வைத்தது..! மதி இஸ் மதி ! உங்கள் பாராட்டுக்கு நன்றி ! பணிவுடன் ஹரி
===========================================

நா.சதிஷ்குமார்05-November-11 7:52 PM

மிக்க நன்றி நண்பர் ஹரி அவர்களே....

நம் தோழிக்கு இதைவிட ஓர் கௌரவம் தரமுடியாது தோழா....

உயிர் தோழிக்கு உயிரெழுத்தில் ஓர் கவி அருமை நண்பரே அபாரம்.....

வாழ்க நீ வாழ்க உன் கவியறிவு....

அன்புடன்=நா.சதிஷ்குமார்.....


HARI HARA NARAYANAN.V 05-November-11 10:26 PM

சந்தனம் மணக்கும் என்றேன்..!

சந்திரன் அழகு என்றேன்..!

இசையும் இனிமை என்றேன்..!

இயல்பு நவிற்சி அணி போலே

இயல்பு குணம் அவர் அழகு -

சிந்திக்கத் தெரிந்தவர்....

சிறப்புக் குணம் படைத்தவர்...

எழுதினால் இடம் போதாது

இத்தோடு முடிக்கின்றேன்...!

நன்றி சதீஷ் அன்புடன் ஹரிஹரன்


HARI HARA NARAYANAN.V 05-November-11 7:49 PM

அ முதல் அக் வரை உயிர் எழுத்து..!

அதுபோல் இக்கவிதை

என் உயிர்த் தோழி வளர்மதிக்காக...!

அன்புடன் ஹரிஹரன்

எழுதியவர் : (1-Sep-12, 12:55 am)
பார்வை : 502

மேலே