துயரத் துளிகள்
பாலில்லா மார்பைச் சூப்பி
வயிறு நிறைய காற்று நிறைந்ததோ?
ஏழைக் குழந்தை !
•
மண்ணில் நடக்கும் இன்னல்களுக்கு
விண் சிந்தும் கண்ணீர்த் துளிகள்
மழை !
•
மாபெரும் புடவைக் கடையில்
முக்கால் நிர்வாணமாய் மொடல் அழகி
விளம்பரம் !
•
தாலியை மீட்கச் சொல்லி
அடகு கடையில் இருந்து வந்தது துண்டு
அழுகிறாள் கைம்பெண் !
•
முகவரி தெரியாத ஒருவனால்
அநாதை பட்டம் நீக்கப் பட்டது
தெருவோர விபச்சாரி !