தந்தைக்கு பாடம்

இரு சக்கர வாகனத்தில் என் மகனுடன்
சாலையில் பயணம்
சிக்னலில் சிகப்பு விளக்கு
மீறி சென்றது என் வண்டி
உடன் என் மகன், அப்பா,
நேற்று பாடம் சொல்லித்தரும்போது
சிகப்பு விளக்கு ஒளிர்ந்தால்
வண்டியை நிறுத்த வேண்டும்
என்று சொன்னீர்களே? என கேட்க
எனக்கு பாடம் புகட்டிய
மகனிடம் மன்னிப்பு கோரினேன்.

எழுதியவர் : லக்ஷ்மிகண்ணன் (1-Sep-12, 9:37 pm)
பார்வை : 199

மேலே