ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

முகம் மலர்ந்தன
மலர்கள்
ஆதவன் !

மரத்திற்கு
உரமானது
உதிர்ந்த இலை !

புல்லின் பனித்துளி
தாகம் தணித்தது
சூரியன் !

அடிக்காதபோது
அமைதி காத்தது
ஆலய மணி !

செடியிலிருந்து
மலர் சிரித்தது
உதிர்ந்த மலர் கண்டு !

தந்தன மகிழ்ச்சி
சிந்தைக்கு
சிறு புல்கள் !

ரசிக்க
சலிக்காத
இயற்கை !

எழுதியவர் : இரா .இரவி (2-Sep-12, 12:05 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 241

மேலே