கருப்பு பூக்கள் ...!



காதலுக்கு கரு இல்லையென

கண்கள் கலங்குதடி...!

காதல் உறவாடின கைகள் -இன்று

கலகம் செய்குதடி...!



பட்டென்று சொல்லிவிட்டாயடி-இந்தப்

பாவி மனசு தாங்கவில்லையடி ...-நீ

உண்மை சொல்லியிருந்தால் ..நம்

உறவு நிலைத்திருக்குமடி ...!



பணமே பெரிதென ...

பாசத்தை அறுத்து விட்டாயடி...!

பட்ட பாட்டுக்கு பயனில்லையென

பாதம் பரிதவிக்குதடி...!



முத்தாரத்தை அச்சாரமாய்க் கொடுத்து

வித்தாரம் செய்து விட்டாயடி...-உன்

பித்தாக இருந்த எனை

கொத்தாக அரிந்து விட்டயாடி...!



பூவிழி உன்பாதம் பார்த்து

பூஜை செய்தேனடி ...-மனப்

பூமாலையில் கொட்டும்

பூ நாகம் போல் புகுந்து விட்டாயடி ...!



காதல் தேசத்திற்கு -நீ

கலங்கமாகி விட்டாயடி ...!

கல்லறையில் கதறினாலும்

காதல் மன்னிக்காதடி ...!



காலன் பதில் கூறுமுன்

காலம் பதில் கூருமடி...-நீ

காணுகின்ற கனவினால்

கண்ணுறக்கம் ஓடுமடி...!



காதலுக்கு....

காளையின் மனது கண்ணி மாடமடி ...

கன்னியரின் மனதோ வாடகைவீடடி...!



புலருகின்ற பொழுது

புண்ணியம் செய்தடி..-நீ

விடுகின்ற மூச்சில்

எரிகின்ற என் ஆவியும்

கலந்திருக்குமடி ...!.

எழுதியவர் : மு .பாலு (9-Oct-10, 11:11 pm)
சேர்த்தது : முபாலு
பார்வை : 458

மேலே