வானிலிருந்து நீயும் சிரித்தாய் வெண்ணிலாவே

வெண்பா பாடிட நினைத்தேன்
நானே வெண்பாதானே என்றாய்
வெண்ணிலாவே

வெண்ணிலாவைப் பாடிட வாயெடுத்தேன்
வெண்ணிலாவே நான்தானே என்றாள் அவள்

அவள் அழகைப் பாடி முடித்தேன்
வானிலிருந்து நீயும் சிரித்தாய் வெண்ணிலாவே

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-12, 8:42 am)
பார்வை : 134

மேலே