கண்மூடி கடவுளிடம், வின்னைதேடி வேண்டுகிறாள்.
என் தோழி ஒருவள்,
நம்புகிறாள் வானில்,
சொர்க்கம் உண்டு,அங்கு,
கடவுள் உறைகிறான்,அவன்,
கூப்பிட்ட குரலுக்கு,
செவி கொடுப்பான் என்று,
அந்த இறைவனிடம் பேசுகிறாள்.
அனைத்தும் அறிந்தவள் தான்,
தோல்விகளை எதிர்த்து நிற்கும்,
ஆற்றல் கொண்டவள் தான்;
என்றாலும் கண்மூடி கடவுளிடம்,
வின்னைதேடி வேண்டுகிறாள்,
உண்மை நிலை மறக்க ஓர் வழியோ?
குழந்தை தலையணையில்
கண் புதைத்து, காண மறுத்தது போல்,
அவள் ஒரு குழந்தை ஆனாள்.
அருகமர்ந்து இருவரும், அந்த
அமைதியான நேரம்,
மௌனமே ராகமாக,
கலைந்தது பறந்து செல்லும்,
ஊ ர்குருவி குரல் கேட்டு,
தருணம் அதோ தனிமை,
இனிமை தரும் வேளை,
சாந்தியுடன் இருந்திடும்,
சலனம் இல்லாப் பொழுதை,
காதலித்தோம் வார்த்தையில்லை,
இன்றும் அவள் வின்னைதேடி,
கண்மூடி வேண்டுகிறாள்,
சின்னஞ்சிறு குழந்தை போல.