பட்டு (சவ ஆடை)

உண்பதில்
உயிர்க்கொலை
வேண்டாம்
என்போரே !
உடுப்பதில்
உயிர்க்கொலை
வேண்டும்
என்கிறீரே !
உயிரினும்
மானம்
பெரிது
என்பதாலா ?
அசைவன்
ஆயுளில்
செய்யும்
கொலையை விட
சைவனின்
ஒரு பட்டாடைக்காக
கொல்லப்படும்
பட்டுப் புழுக்கள்
ஏராளம்
சவ ஆடைதான்
சபை ஆடையா ?