[316 ] குறுகுறுப் பாக்கள்-[3 ]

பூமியின் தும்மலோ?
பொறுக்காத பெருமூச்சோ?
எரிமலை..!
-௦-

என்னவளம்
கொடுக்கவில்லை
நானுனக்கு?
ஏன்,என்னை
நோண்டுகிறாய்
எண்ணெய் கேட்டு?
பொங்கியது கடல் ..
சுனாமியாய்!
-௦-

என்றைக்கும்போல்
இன்றும்
இறந்துகொண்டிருந்தது..
ஏறெடுத்துப் பார்க்க
யாருமில்லாப்
பகல்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (4-Sep-12, 8:53 pm)
பார்வை : 183

மேலே