பள்ளிப் பறவைகள்
மனித வாழ்வில்
மழலைகள் நம் பருவம்,
மார்பு குளிரும்
மகிழ்வுகள் இக்காலம்.
நன்மைகளை
மறக்காது,
மறுக்காது.
மாணாக்கப் பருவம்
மாதங்களில் மார்கழி போல
நம் வாழ்வில் மனம் வீசும்
பெட்டிக்கடைகளில்
வாங்கி உண்ட பொருட்கள்
ருசிக்கும் வாழ்நாள் வரை
புத்தகங்கள் ,மதிய உணவு
சில்லறைகள் அன்புரைகள்
கொடுத்துதவிய மனங்களை
இப்போது நினைக்கும் போது
மனக்கண்ணில்
மனக்கண்ணீர் வழிகிறது .
கண்கள் வேண்டுமானால்
பிரித்து விடலாம் நம்மை
மனங்கள் மட்டும்
நினைத்துக்கொண்டுதான் இருக்கும்
இச்சுகமான சுகந்தங்களை ...
மூத்த மாணாக்கர்களுக்கு ...
எங்களுக்கு முன்னால்
உலகைப்பார்த்த நீங்கள்
எங்களுக்கு முன்னால்
அதிக விளையாட்டுக்கள் விளையாடிய நீங்கள்
எங்களுக்கு முன்னால்
அதிக பாடங்களைப் படித்த நீங்கள்
இன்று எங்களுக்கு முன்னால்
இப்பள்ளியை விட்டு ...
நட்பென்ற பாலத்தை
பிரிவென்ற காலத்தால்
தகர்க்க இயலாது .
பாவம் இந்த காலம்
இந்த நட்பிடையே
தோற்றுப்போகும் ஒருநாள்.
பள்ளி என்ற ஆலமரத்தில்
வகுப்புகள் என்ற கூடுகளிலிருந்து
கற்றுக்கொண்டோம் பல பாடங்களை
கற்றதை வைத்து வேர்விட்டுத்
துளிர்ப்போம் விழுதுகளைப்போல
தற்காலிகமாகப் பறந்திடுவோம் - இந்த
பள்ளியின் பறவைகளாய்
பள்ளிப் பறவைகளாய் .