விநாயகர் பிடிக்கும்
ஆண்டவனை நான்
அடிபணிவதில்லை
அது ஒரு கருத்து வேறுபாடு
அர்ச்சகர் எனும் இடைத்தரகர்கள்
இருப்பதால் எழுந்த கோபம்
ஆனாலும் சாராயம் படைக்கும்
என் சாமிகளான
முண்டனை பிடிக்கும்
முனியசாமியை பிடிக்கும்
அது கீழ்தட்டு மக்களுக்கு
உருவான சாமி
சூத்திரர்கள் திட்டமிட்டு
படைத்தது
அவர்கள் கருவறை சாமிகளுக்கு
இவை காவல் தெய்வங்கள்
அத்தோடு
ஆதிமுதல் கடவுள்
விநாயகரை ரெம்ப பிடிக்கும்
அழகான முருகனுடம்
ஆணை முக விநாயகரும்
என் மகன் என்று
சிவன் சொல்வதால்
உலகில் அழகும் உண்டு
அசிங்கமும் உண்டு
இந்து வேதம்
இதன்முலம் அறியவைத்ததால்