உன் நட்பை எனக்கு கொடுத்து விடு! ..........

என் இதயத்தை நீ எடுத்த போது,

உன் இதயத்தை எனக்கு தர மறுத்தாய்.

ஏன் என்று கேட்டபோது,

வேறு ஒருத்தியிடம் பறிகொடுத்து விட்டாய் என்றாய்!

அதை புரிந்து கொண்டு உன் வலியை நானும் அனுபவித்தேன்........

உன்னவளுக்காக உன் நேசங் கொண்ட நெஞ்சம் எழுதிய கவிதைகளை வாசித்து நானும் கண்ணீர் சிந்தினேன்.......

கண்ணீர் செய்த மாயமோ இல்லை என் புத்தி கெட்ட நேரத்தின் சதியோ, உன்னவளை உனக்காக தொடர்பு செய்து விட்டேன்!


அதனால் உன் நட்பையும் இழந்து விட்டேன்!

நான் தொலைத்த நட்பை திருப்பிக் கொடுத்து விடு என்று இதயம் கதறுகிறது

ஆனால், தகுதி அற்றவன் எனக்கு ஏன் தேவை இந்த உறவு என்று என் மனமே என்னைக் கேட்கிறது!

ஆனாலும் உன்னைக் கேட்கிறேன் மறுமுறை......

என் நட்பை எடுத்து விட்டாய் நீ.

உன் நட்பை எனக்கு கொடுத்து விடு!

எழுதியவர் : Gayathri.M (11-Oct-10, 12:23 pm)
பார்வை : 912

மேலே