ஈழத்தின் தர்மம்

காலம் கனிந்தது கண்ணா -எங்கள்
கவலைகள் போக்கிட வா வா
சீலம் கொண்ட உன் வரவை -நாங்கள்
கொண்டாடிவேண்டுகிறோம் வா வா

தமிழரு கென்றும் அநீதி -இங்கே
தமிழருக்கென்று ஓர் சட்டம்
தரணியில் அலைகிறோம் பாராய் -எங்கள்
தாயகம் காத்திட வா வா

பல நெடும் காலமாய் நாங்கள் -பட்ட
வேதனை போக்கிட வா வா
விலங்கினை ஓடிதிட ஓடிவா -நீ
எமக்கு வீரம் கொடுத்திட தேடிவா

தோள்களில் ஆயுதம் சுமந்தோம் -பலர்
சூழ்ச்சியால் பலமெல்லாம் இழந்தோம்
பகலவன் போல் ஒளி கொள்ள- பரந்தாமனே
படை கொண்டு நீவா

வீழாத வீரமே தா தா -நமக்கு
ஆண்டிட எம் தேசம் தா தா
அகிலத்தில் எமினம் ஓங்க -தரணியில்
எம்கொடி ஏற்றிட வரம் தா

தர்மத்தை காத்திடும் கிருஷ்ணா -நீ
விஸ்வ ரூபமாய் வா வா
தாயகம் மீதிலே தொடர்ந்து வாழ்ந்திட -திரு வரம் தந்திட வா வா

சிறைகளில் வாடுது வீரம் -உலக வீதியில் போகுதே தமிழரின் மானம்
அடங்கிய காலமே போதும்-எங்களை
ஆண்டிடும் இனமாய் ஆக்கிட வா வா

பசியோடு இருந்தது போதும் -எங்கள்
தேசம் பறி போனதும் போதும்
பாண்டவர் தர்மத்தை காத்தாய் -இந்த
ஈழவர் தர்மத்தை காக்க நீ வா வா


கிருஷ்ணா

எழுதியவர் : கிருஷ்ணா (8-Sep-12, 3:35 pm)
பார்வை : 192

மேலே