எப்படி ஆறுதல் சொல்வேன்..!
வீடு விற்ற கையோடு
வாசலில் இருந்த மரத்தையும்
விலை பேசி முடித்தார் அப்பா ..
நாளை வெட்ட வருமாய்
அச்சாரம் வாங்கி கொண்டார்..
தடுத்த என்னை வீட்டின்
வறுமை சொல்லி ஆறுதல் கூறினார்..
நான் எப்படி ஆறுதல் சொல்வேன்
கூடு கட்டிய பறவையிடமும்
தாவி குதிக்கும் அணிலிடமும் ..
நாளை இந்த மரம் இங்கு இருக்க போவதில்லையென..