அறிஞர் தொடர்பு கிடைக்குமே!

பள்ளி செல்லும் குழந்தைகள்
வீட்டில் உள்ள தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் தரும் என்றும் தொல்லையே!

விளையாட்டுக் காட்சிகள்,
நகைப்பூட்டும் அலைவரிசைகள்,
பிள்ளைகள் படிப்புக்கு இடையூறே!

காட்சிகள் பார்க்கும் வேளையில்
தேவையற்ற நொறுக்குத் தீனிகள்
உடல் எடையைக் கூட்டுமே!

கண்கள் விரியப் பார்க்குமே,
கண்ணில் நீர் வழியுமே -அவர்க்கு
பின்வரும் தலைவலியே!

தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்பது
மூளை மழுங்கச் செய்யுமே
பார்வை குறைபாடும் தோன்றுமே!

மாலையிலும்,
ஓய்வு வேளையிலும்
ஓடி விளையாட வேண்டுமே!

புத்தகங்கள் படிப்பது
அறிவுப் பசியைத் தீர்க்குமே
அறிஞர் தொடர்பு கிடைக்குமே!

படிக்கப் படிக்க
பண்டிதனாக ஆகலாம்
பார் புகழ வாழலாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-12, 11:59 pm)
பார்வை : 123

மேலே