எல்லாமும் வேண்டும்...

தீயவை இருந்தால்தான்
நல்லவை எதுவென புரியும்
வெறுப்பு இருந்தால்தான்
அன்பின் அருமை தெரியும்
எதிரி இருந்தால்தான்
நண்பனின் தோழமை புரியும்
தோல்வி இருந்தால்தான்
வெற்றியின் வேர்கள் தெரியும்
பள்ளம் இருந்தால்தான்
உயரத்தின் சிறப்பு தெரியும்
இறப்பு இருந்தால்தான்
பிறப்பின் மகிமை புரியும்
ஒன்றை இழந்தால்தான்
மற்றதன் அருமை தெரியும்
ஆண்பெண் இருந்தால்தான்
ஆன்ம மகத்துவம் புரியும்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (11-Sep-12, 12:10 am)
பார்வை : 163

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே