கன்னி நிலா
மேகம் செல்ல மறைந்த நிலா
நான் மோகபார்வை கொண்டதாலா
நானும் பார்த்திட்டேன் வெகுநாளா
கொஞ்சம் நேரமே அந்தமுகில் உலா
ஆகவே கேளாயோ முத்து நிலா
உன்னை கண்டு மலர்ந்த
மல்லி தலா ஒரு வண்டோடு காதல்
கொண்டது ஆனால்
உலகம் வந்தது முதலே ஏனோ நீயும்
துணை கொள்ளவில்லையே கன்னிநிலா
தூரத்தில் இருந்தால் என்ன
நீயும் உம் என்று சொல்லடி விழாத - நிலா
வான் வீட்டுக்கே வந்துனை
பெண் கேட்பேன்
வாழ்கை துணை ஆக்கிய பின்தான் நான் இறப்பேன்